43 -வது சென்னை புத்தக கண்காட்சி - வாசகர்களின் வருகை நாள்தோறும் அதிகரிப்பு
பதிவு : ஜனவரி 13, 2020, 08:22 AM
43 ஆவது சென்னை புத்தக கண்காட்சிக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.  மைதானத்தில் 
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள்  மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 43-வது சென்னை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.  

வரும் 21 ந்தேதி வரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

கடந்த 3 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்துள்ளதாக 
பதிப்பகத்தார் தெரிவித்தனர். 

சமூகம், அறிவியல், உடல் நலம், உணவு தயாரிப்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாக வாசகர்கள் தெரிவித்துள்ளனர். 

தினத்தந்தி அரங்கில் பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளதாகவும், அவற்றில் வரலாற்று சுவடுகள் புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் வாசகர்கள் தெரிவித்தனர். 

பல எழுத்தாளர்களின் புதிய நாவல்கள், சிறுகதை தொகுப்புகள் அழகிய புத்தகங்களாக விற்கப்படுவதாகவும், கண்காட்சியில் விற்கப்படும் புத்தகங்களுக்கு விலை தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் வாசகர்கள் தெரிவித்தனர். 

குழந்தைகளுக்கான பல புத்தகங்கள் அறிவாற்றலை வளர்க்கும் வகையில் உள்ளதாகவும், அவற்றை வாங்கி பயன்பெற வேண்டும் என்றும் புத்தக பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சிக்கு  வாசகர்களின் வரவேற்பும், புத்தகங்களின் விற்பனையும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

270 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

136 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

82 views

பிற செய்திகள்

களைகட்டிய மாட்டு வண்டி போட்டி - 20 காளைகள் பங்கேற்பு

தூத்துக்குடி அருகே மேலத்தட்டபாறை பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது

12 views

சைக்கிளில் வலம் வரும் ஃபிரான்ஸ் தம்பதி - சுற்றுச்சூழல் மாசை தடுக்க சைக்கிளில் விழிப்புணர்வு

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு பிரான்ஸ் நாட்டு தம்பதி நவீன சைக்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

8 views

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் பாதிப்பு - உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

நெற்பயிர் பாதிப்பிற்கு அரசு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

7 views

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாநாடு - 3,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

10 views

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - ஆர்ப்பாட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

13 views

"தமிழக கலை, கலாசாரம் தொல்லியல் சிறப்புமிக்கது" - ஹூஸ்டன் பல்கலைக் கழக டீன் புகழாரம்

தமிழகத்தின் கலை, கலாச்சாரம் உலகளவில் மிகப் பெரும் தொல்லியல் சிறப்புமிக்கது என அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழக டீன் புகழாரம் சூட்டியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.