ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் - வெற்றி நிலவரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் - வெற்றி நிலவரம்
x
மாவட்ட ஊராட்சி தலைவருக்கு மொத்தம் உள்ள 27 பதவியிடங்களில் 26 பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. 13 இடங்களிலும், தி.மு.க. 12 இடங்களிலும், பா.ம.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 

மாவட்ட ஊராட்சி துணை தலைவருக்கு மொத்தம் உள்ள 27 பதவியிடங்களில் 26 பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. 7 இடங்களிலும், தி.மு.க. 11 இடங்களிலும், பா.ம.க. 3 இடங்களிலும், பா.ஜ.க 2 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், தே.மு.தி.க. 1 இடத்திலும்  வெற்றி பெற்றுள்ளன. 

சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராததால் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக மாநில தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 27 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி, ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறவில்லை என்று மாநில தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியிடத்திற்கான மறைமுக தேர்தல் நடைபெற்ற 287 ஊராட்சி ஒன்றியங்களில் அ.தி.மு.க. 140 இடங்களிலும், தி.மு.க. 125 இடங்களிலும், பா.ம.க. 7 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. 

காங்கிரஸ் கட்சி 5  இடங்களிலும், பா.ஜ.க. 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், அ.ம.மு.க.  2 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

மொத்தம் உள்ள 314 ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பதவியிடங்களில் 41 இடங்களுக்கு போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள்  வராததால்  மறைமுக தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 273 பதவியிடங்களுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. 94 இடங்களிலும், தி.மு.க. 107 இடங்களிலும், பா.ம.க. 19 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தே.மு.தி.க. 7 இடங்களிலும், அ.ம.மு.க. 5 இடங்களிலும், பா.ஜ.க 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், சோசியல் டெமாகரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா ஒரு இடத்திலும்  சுயேட்சைகள் 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்