வைகுண்ட ஏகாதசி : வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, வைணவ கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
x
மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி - வைகுண்ட ஏகாதசி. இந்த நன்நாளில் விஷ்ணுவை வணங்கினால், கேட்ட வரம் கிடைக்கும் என்பது இந்துக்களின் ஐதீகம். பரமபத சொர்க்க வாசல் வழியாக பெருமாளை கண்டு தரிசித்தால், வாழ்வில் பிரச்சினை தீரும், வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

அந்த வகையில் இன்று வைகுண்ட ஏகாதசி பெருவிழா, பெருமாள் கோயில்களில் கோலாகலமாக நடைபெற்றது. சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிவிக்க அதிகாலை 2 மணி முதலே பக்தர்கள் காத்திருந்தனர். 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தி பரவசத்துடன் காத்திருந்த பக்தர்கள், பார்த்தசாரதியை கண்டதும், கோவிந்தா... கோவிந்தா என முழக்கம் எழுப்பி வழிபட்டனர்.

ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது

இதேபோல, திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 4.45 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ரெங்கநாதரை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

மதுரை தல்லாகுளத்தில் சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில்  சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 

கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் விழா

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது.  ஸ்ரீரங்கம் கோவில் முறைப்படிவிழா நடைபெறும் இந்த கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். 




Next Story

மேலும் செய்திகள்