பொங்கல் பரிசு தொகுப்பு - டோக்கன் பெற அலைமோதிய மக்கள்

திருமங்கலத்தில், பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் பெற நியாயவிலை கடையில் பொதுமக்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பொங்கல் பரிசு தொகுப்பு - டோக்கன் பெற அலைமோதிய மக்கள்
x
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் பகுதியில் 14 ஆயிரம் பேருக்கு தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறார். இதற்காக நியாய விலை கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. பல மணி நேரமாக ஊழியர்கள் தொடர்ந்து டோக்கன் வழங்கிய போதிலும் , மக்கள் கூட்டம் குறையவில்லை. இரவு 9 மணிக்கு மேலாகவும் நியாய விலை கடையில் பொதுமக்கள் அலைமோதினர். பொதுமக்களின் தள்ளுமுள்ளுவில் சிக்கய நியாயவிலை கடை உழியர்கள், கடையை அடைத்து விட்டு, மக்களை, திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்