6ம் தேதி பள்ளிகள் திறப்பு - திறக்கப்படும் நாளன்றே தேர்வு

அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, வரும் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினமே, திருப்புதல் தேர்வு நடைபெறுவதால், மாணவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.
6ம் தேதி பள்ளிகள் திறப்பு - திறக்கப்படும் நாளன்றே தேர்வு
x
வழக்கமாக அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப்பின், ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக, விடுமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிக்கு செல்லும் முதல் நாளே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் திருப்புதல் தேர்வு நடக்கிறது. ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்பதால் எந்த மாற்றமும் இன்றி தேர்வை நடத்த, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்கள், அடுத்த வாரம் வழங்கியபின், பாடத்திட்டங்களை முடித்து, பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டிய நிலை காரணமாக ஆசிரியர்களும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்