"8-ஆம் தேதி அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும்" - தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு

வரும் 8-ஆம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
8-ஆம் தேதி அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் - தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு
x
மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும் ஏஐடியுசி, சிஐடியு, உள்ளிட்ட மத்திய தொழிலாளர் சங்கம்,வரும் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில்,  மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வங்கி, காப்பீட்டுத் துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பர் என, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், ஜனவரி 8-ம் தேதி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என தலைமைச் செயலாளர் கே.சண்முகம்  உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது என கூறியுள்ளார். 8-ஆம் தேதி பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியத்தை பிடித்தம் செய்ய உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்