சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்து செல்ல ரூ.10 கட்டணத்தில் பேருந்து

புத்தாண்டையொட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் சென்னையில், பத்து ரூபாய் கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்து செல்ல ரூ.10 கட்டணத்தில் பேருந்து
x
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சுற்றுலா வளாகத்தில் இருந்து இயக்கப்படும் இந்த பேருந்துகள் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பொருட்காட்சி, மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், அஷ்டலட்சுமி கோவில், ஆறுபடை முருகன் கோவில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய முக்கிய சுற்றுலா தலங்களுக்கு 10 ரூபாய் கட்டணத்தில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணியிலிருந்து, மாலை 6 மணி வரை, இந்த பேருந்தில் பயணம் செய்யலாம். ஏராளமான பயணிகள், ஆர்வத்துடன் இந்த பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர். 


Next Story

மேலும் செய்திகள்