"தென்னிந்திய கலைகள் தான் தொன்மையானது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகவல்

இந்தியாவின் பிற மாநிலங்களில் கலை, கலாச்சாரம் இருந்தாலும், தென்னிந்திய கலைகளும், கலாச்சாரமும் தொன்மையானது என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய கலைகள் தான் தொன்மையானது - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகவல்
x
இந்தியாவின் பிற மாநிலங்களில், கலை, கலாச்சாரம் இருந்தாலும், தென்னிந்திய கலைகளும், கலாச்சாரமும்  தொன்மையானது என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில், தமிழர்களின் பாரம்பரிய கலைகள் குறித்த, 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தென்னிந்திய கலைகள் தான் தொன்மையானது உண்மை என்று கூறினார். இதை எங்கு சென்றாலும் உரக்க சொல்வேன் என்று ஆளுநர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்