கறிக்கடை இளைஞரின் கழுத்தை இறுக்கிய கருவி : துடிதுடித்து இறந்த இளைஞரின் இறுதி நிமிடங்கள்

கறிக்கடையில் வேலை பார்த்த இளைஞர் ஒருவர், கறி வெட்டும் கட்டையை சுத்தம் செய்யும் கருவியில் சிக்கி துடிதுடித்து இறந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கறிக்கடை இளைஞரின் கழுத்தை இறுக்கிய கருவி : துடிதுடித்து இறந்த இளைஞரின் இறுதி நிமிடங்கள்
x
திருவண்ணாமலயை சேர்ந்த ஏழுமலை என்ற இளைஞர், திருப்பூர் அய்யம்பாளையத்தில் கறிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன் இரவு வேலை முடிந்து கறி வெட்டும் கட்டையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சுத்தம் செய்யும் கருவியில் ஏழுமலை அணிந்திருந்த உடை, சிக்கி கழுத்தை இறுக்கியுள்ளது. உடனடியாக சுதாரித்து கொண்ட ஏழுமலை மின் இணைப்பை துண்டித்தார். இருந்த போதும் கழுத்து முற்றிலும் இறுகியதால் துணியை அறுப்பதற்காக அங்கிருந்த கத்தியை எடுக்க முயன்றார். ஆனால், அதனை எடுப்பதற்கு கூட முடியாத அளவிற்கு ஏழுமலையின் கழுத்தை இறுக்கியுள்ளது. இதை தொடர்ந்து நிலை குலைந்து விழுந்த ஏழுமலை அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 

 

Next Story

மேலும் செய்திகள்