"மருமகள் தூக்கிட்டு தற்கொலை : உறவினர்கள் சாலை மறியல்"

ராஜபாளையத்தில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரின் மாமனார் மற்றும் மாமியாரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மருமகள் தூக்கிட்டு தற்கொலை : உறவினர்கள் சாலை மறியல்
x
ராஜபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அஸ்வினி. இவருக்கும் சிவகிரியைச்  சேர்ந்த அருணாசலத்திற்கும் 6 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கணவருடன்  கருத்து வேறுபாடு காரணமாக ராஜபாளையத்தில் உள்ள தந்தை வீட்டில் அஸ்வினி வசித்து வந்துள்ளார். அவரை மாமனாரும், மாமியாரும் தொலைபேசியில் திட்டியதாக கூறப்படுகிறது. மனவேதனையில் இருந்த அஸ்வினி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அஸ்வினியின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு மாமனாரும், மாமியாரும் சென்றுள்ளனர். அவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்