கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு நாளை முதல் ஜன.01 வரை விடுமுறை

உள்ளாட்சி தேர்தல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு நாளை 21 ம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
x
உள்ளாட்சி தேர்தல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு நாளை 21 ம் தேதி  முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள உத்தரவின்படி, 4 வேலை நாட்களை விடுமுறையாக அறிவித்துள்ளதால், அதனை சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்தி ஈடு கட்டிக்கொள்ளலாம் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சூழலில் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்