"இந்தியாவின் சிறந்த 8 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று" - அமைச்சர் அன்பழகன் பெருமிதம்

கடந்த வருடம் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியாவில் சிறந்து விளங்கும் 8 மாநிலங்களில் தமிழகமும் இடம் பெற்றுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறந்த 8 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று - அமைச்சர் அன்பழகன் பெருமிதம்
x
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் அன்பழகன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் கொங்கு மண்டலத்தின் மணிமகுடம் பாரதியார் பல்கலைக்கழகம் எனவும் உலகளவில் கல்வியை வழங்கும் மூன்று முக்கிய நாடுகளில் இந்தியா இடம்பெற தமிழகமும் ஒரு காரணம் என்றார். தமிழகத்தில் 49 சதவீதம் இந்தாண்டு உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கையாக உயர்ந்துள்ளதாகவும், சென்றாண்டை விட இது அதிகம் என்று குறிப்பிட்டார் . பின்னர் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சான்றிதழ்கள் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்