"ஜனவரி 23க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" : எம்.பி. ரவீந்திரநாத்துக்கு இறுதி கெடு

தேர்தல் வழக்கில் தேனி தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்துக்கு இறுதி கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜனவரி 23க்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் : எம்.பி. ரவீந்திரநாத்துக்கு இறுதி கெடு
x
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவீந்திரநாத் எம்பியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி அத்தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  மனுதாரர் மிலானி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றும்,பதில் மனு அளிக்கும் வரை  அவர் எம்.பி. பதவி வகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மனுவில்  தெரிவிக்கப்பட்டிருந்தது இதையடுத்து, வரும் ஜனவரி 23ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ரவீந்திரநாத் குமாருக்கு இறுதி கெடு விதித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் வழக்கின் விசாரணையையும் அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்