துள்ளித் திரியும் வயதில் பிச்சையெடுக்கும் சிறுவர்கள் : மதுபோதைக்கு தாய் அடிமையானதால் நேர்ந்த அவலம்

துள்ளித் திரியும் வயதில் இரண்டு சிறுவர்கள், காஞ்சிபுரம் கோயில் வாசலில் பிச்சையெடுத்து வருவது, காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
துள்ளித் திரியும் வயதில் பிச்சையெடுக்கும் சிறுவர்கள் : மதுபோதைக்கு தாய் அடிமையானதால் நேர்ந்த அவலம்
x
குடிபோதைக்கு தாய் அடிமையானதால், சிறுவர்கள் இரண்டு பேர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியதோடு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எப்பொழுதும் குடித்துவிட்டு மதுபோதையில்  இருக்கும் அந்த தாய், அப்பகுதியில் குப்பை பொறுக்கும் ஒருவருடன் தற்போது சேர்ந்து வசித்து வருகிறார். படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தாயின் கரம்பிடித்து வந்த 2 சிறுவர்களும் தற்போது செய்வதறியாமல் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இடையே கையேந்தி பிச்சை எடுத்து வருகிறார்கள். மதிய நேரத்தில் கோயிலின் பிளாட்பாரத்தில் தங்கும் இவர்கள், இரவில் ஒரு ஆட்டோவில் வசித்து வருகிறார்கள். அந்த ஆட்டோவே, இவர்களின் வீடாகவும் மாறி உள்ளது. அவர்களது உடமைகள் அனைத்தும் இருப்பது, அந்த ஆட்டோவில் தான். கல்வி கற்க வேண்டிய வயதில், பிச்சையெடுத்து வரும் இந்த சிறுவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்