குன்னூரில் கனமழையால் மண்சரிவு : மண்ணில் சிக்கிய 6 பேர் உயிருடன் மீட்பு

குன்னூரில் கனமழையால் மண்சரிவு காரணமாக மண்ணில் சிக்கிய 6 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டுள்ளனர்.
குன்னூரில் கனமழையால் மண்சரிவு : மண்ணில் சிக்கிய 6 பேர் உயிருடன் மீட்பு
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில்  கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் குன்னனூர் வண்ணாரப்பேட்டை அருகில்  ஜீலியட் என்ற பெண்மனி  சாலையில் சென்று கொண்டிருக்கும் போது  மண்சரிந்து, மண்ணில் சிக்கிகொண்டார். அவரை அங்குள்ள ஆட்டோ ஒட்டுநா்களும், தீயணைப்புத் துறையினரும் நீண்ட நேரம் போராடி உயிருடன்  மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதேபோல் டென்ட்ஹில் அருகே குடியிருப்பில் மீது மண்சரிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த ரேவதி மற்றும் குழந்தைகள் 5 போ்  சேற்றில் சிக்கி கொண்டனா். அவா்களை தீயணைப்புத் துறையினா் மீட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்