ஆதிதிராவிடர் வார்டுகளில் மதம் மாறியவர்கள் போட்டி : தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

உள்ளாட்சித் தேர்தலில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மதம் மாறியவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
ஆதிதிராவிடர் வார்டுகளில் மதம் மாறியவர்கள் போட்டி : தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
x
உள்ளாட்சித் தேர்தலில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் மதம் மாறியவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. ஆதிதிராவிடர்கள்  மற்றும் பழங்குடியினருக்கு  ஒதுக்கப்படும் வார்டுகளில் கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய சமூகத்துக்கு மாறியவர்கள்  போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதில் தலையிட இயலாது என்றும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.


Next Story

மேலும் செய்திகள்