ரூ.3000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் : 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

9 புதிய நிறுவனங்கள் மூலம், 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சென்னையில் இன்று கையெழுத்தாகின.
ரூ.3000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் : 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
x
தமிழக அரசின் தொழில் துறை சார்பில், தொழில் முதலீடு மற்றும் திறன் மேம்பாடு மாநாடு சென்னையில் நடைபெற்றது.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், எரிசக்தி துறை, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உதிரிபாகங்கள் தொழிற்சாலை, காலணி தொழிற் சாலை விரிவாக்கம், மின்சாரத்தில் இயங்கக் கூடிய கார் உற்பத்தி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி சென்னை ஐஐடி உள்பட  9 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நிறைவேற்றப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 3,000 கோடி ரூபாய் முதலீடுகள்  மூலம்,  20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் 2வது ஆண்டாக தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் பல்துறை வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும், தொழில்துறைக்கு ஏற்ற செயல்பாட்டில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்