நாகையில் கடல் சீற்றம் : 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு

நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நாகையில் கடல் சீற்றம் : 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு
x
நாகையில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடந்த ஒருவாரமாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் 54 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்ற மீனவர்களும், மீன் பிடிக்க முடியாமல் அவசர அவசரமாக கரை திரும்பி விட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடல் அலைகள் சுமார் 5 அடிக்கு மேலே எழுவதால், மீனவர்கள் படகுகளை கயிறு கட்டி பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்