முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு பட்டியல் வெளியீடு
அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் பணிக்காக, 2 ஆயிரத்து 144 இடங்களுக்கான போட்டித் தேர்வில் சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், முதல்கட்டமாக ஆயிரத்து 352 பேர் அடங்கிய தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வான அனைவரும் டிசம்பர் இறுதிக்குள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தமிழ், வரலாறு புவியியல் ஆகிய பாடங்களுக்கு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் வழக்கு காரணமாக வெளியிடப்படவில்லை.
Next Story