நடிகர் வெங்கடேஷ் உறவினர்களிடம் ஐ.டி. ரெய்டு

தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் உறவினர் அறக்கட்டளைக்கு சொந்தமான 2 இடங்களில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
நடிகர் வெங்கடேஷ் உறவினர்களிடம் ஐ.டி. ரெய்டு
x
தெலங்கானா மாநிலத்தில், பிரபல நடிகர்கள் வெங்கடேஷ், மகேஷ்பாபு,  ராணா டகுபதி, நானி உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலக​ங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  அதேபோல, வெங்கடேஷின் சகோதரரும், தயாரிப்பாளருமான சுரேஷ் பாபுவுக்கு சொந்தமான ராமாநாயுடு ஸ்டூடியோவிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக, சென்னை தியாகராய நகரில் உள்ள ராமாநாயுடு அறக்கட்டளை அலுவலகம் மற்றும் சவுகார்பேட்டையில் உள்ள தயாரிப்பு அலுவலகத்திலும், வருமான வரி சோதனை நடைபெற்றது. நேற்று காலை 9 மணி முதல் நடைபெற்று வரும் இந்த சோதனையில் 4 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்