மறைமுக தேர்தல் - தமிழக அரசு விளக்கம்
மேயர் பதவிக்கு மறைமுகத்தேர்தல் நடத்துவது ஏன் என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேயர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும் கவுன்சிலர்கள் மற்ற கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கும் போது, நிர்வாகம் பாதிக்கப்படுகிறது என்றும் வேறு, வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பதால் சில சமயங்களில் மாநகர, நகர மன்றக் கூட்டங்களை கூட்டுவதே சிக்கலாகி விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மறைமுக தேர்தலால் நிலையான அமைப்பு உருவாகும் என்றும், உறுப்பினர்களுக்கு பொறுப்பு கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக கவுன்சிலர்களை கொண்ட சென்னை, மதுரை போன்ற மாநகராட்சிகளில் சிறப்பாக பணியாற்ற இம்முறை வழிவகுக்கும் என்றும்,பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து, மறைமுக தேர்தலே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்கும் என்ற பரிந்துரை கிடைத்தாகவும் தமிழக அரசின் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story