கமல் பாராட்டு விழாவில் பேசிய ரஜினியின் கருத்தால் பரபரப்பு

மக்களின் நலனுக்காக, தேவை ஏற்பட்டால் இருவரும் இணைந்து செயல்படுவோம் என கமல்ஹாசனும் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல் பாராட்டு விழாவில் பேசிய ரஜினியின் கருத்தால் பரபரப்பு
x
சென்னையில் கமல்ஹாசனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது போன்ற அதிசயம், நாளையும் நடக்கும் என்று கூறினார். 

இது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சித்தாந்தங்கள் வேறுபட்டாலும் ரஜினிக்கும் தமக்கும் இடையேயான 43 ஆண்டு கால நட்பை கைவிடமாட்டோம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். 

இந்தப் பேச்சு, தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து, கருத்து தெரிவித்த நடிகை சுஹாசினி,  ரஜினி, கமல் இணைந்தால் தமிழகத்துக்கு நல்லது என்றார்.

ஒடிஷாவில் டாக்டர் பெற்று திரும்பிய கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் பேசும்போது, ''அவசியம் ஏற்பட்டால், அரசியலில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து செயல்படுவேன்'' என்று கூறினார்

கமல் பேசி சென்ற சில மணி நேரத்தில், சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி, மக்கள் நலனுக்கான தேவை ஏற்பட்டால் கமலுடன் இணைந்து செயல்படுவேன் என அவரது ஸ்டைலில் அதிரடி தெரிவித்தார்.

எத்தனை பேர் வந்தாலும் அதிமுக தனியாக எதிர்த்து நின்று வெற்றி பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எந்த கைகள்  இணைந்தாலும் கவலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

நட்பு ரீதியான கூட்டணி அமைவது சாத்தியம் தான் என்ற மூத்த பத்திரிகையாளர் மாலன், அதன் பின் இருவரும் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று கூறுகிறார்.

தமிழர்களின் நலனுக்கு இணைகிறோம் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூறி வருவதை தான் ரஜினியும், கமலும் தெரிவித்ததாக கூறும், பாஜகவைச் சேர்ந்த ராகவன், இருவரும் கூட்டணி அமைத்து தேர்தலில் நிற்க போகிறார்கள் என்பது பற்றி தெளிவாக அவர்கள் ஏதுவும் கூறவில்லை என்றார்.

தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்கள் அரசியலில் இணைந்து செயல்பட உள்ளதாக கூறிய நிலையில், அவர்கள் எப்போது இணைந்து செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்