கார்த்திகை மாதம் - கடைகளில் குவியும் ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் நாளை துவங்குவதால், ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான வேட்டி, துண்டு, மாலை மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது.
கார்த்திகை மாதம் - கடைகளில் குவியும் ஐயப்ப பக்தர்கள்
x
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை மாதத்தில் கேரளா மட்டுமல்லாது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவது வழக்கம்.  கார்த்திகை மாதம் தொடங்கியதால், தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான கருப்பு, நீலம், மஞ்சள், காவி, பச்சை போன்ற வண்ண வேட்டிகள் துண்டு , துளசி மாலை, ருத்ராட்சம், என பல பூஜை பொருட்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்