"2024க்குள் கூடுதலாக 6000 மெகாவாட் மின் உற்பத்தி" - அமைச்சர் தங்கமணி தகவல்

திருவள்ளூர் மாவட்டம் வாணியன்சத்திரத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகளின் நேரடி காட்சிகளை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.
x
திருவள்ளூர் மாவட்டம் வாணியன்சத்திரத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகளின் நேரடி காட்சிகளை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் புதிய மின்திட்டங்கள் மூலம் வரும் 2024ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 6 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்தார். 400கிலோவாட் மின்சாரம் பாயும் மின் பாதையில் இணைப்பை துண்டிக்காமல் நேரடியாக பழுது நீக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்