காவல்துறை உபகரண ஊழல் - ஸ்டாலின் கண்டனம்

காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து, தண்டனை பெற்று த‌ர வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறை உபகரண ஊழல் - ஸ்டாலின் கண்டனம்
x
'காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்' நடந்துள்ளதாக சுட்டிக் காட்டிய ஸ்டாலின், இது தொடர்பாக உள்துறை செயலாளர் விசாரிக்க ஆணையிட்டும், 

லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் நடத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பான கோப்புகளை பராமரித்து வந்த அமைச்சு பணியாளரை திடீரென ராமநாதபுரத்திற்கு மாற்றியது ஆதாரங்களை அழிக்கும் முயற்சியோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

11 மாதங்கள் ஆகியும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையினர், ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத‌து ஏன் என கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்று தருமாறு வலியுறுத்தியுள்ளார். தலைமைச் செயலாளர் இதனை உறுதி செய்ய வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்