நரம்பியல் மருத்துவரை நியமிக்க கார்த்தி சிதம்பரம் சுகாதாரத் துறைக்கு கடிதம்

சிவகங்கை தொகுதி எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
நரம்பியல் மருத்துவரை நியமிக்க கார்த்தி சிதம்பரம் சுகாதாரத் துறைக்கு கடிதம்
x
சிவகங்கை தொகுதி எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில், நரம்பியல் பிரிவு தொடங்கி  2 ஆண்டுகள் ஆகியும், இதுவரை போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படாததால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரை செய்யப்படுவதால், கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில், நரம்பியல் மருத்துவரை உடனடியாக நியமிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்