உடலில் ஊசி உடைந்து தங்கியதை மறைத்த மருத்துவர்

காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்ற இளைஞரின் உடலில் ஊசி உடைந்து தங்கியதை மருத்துவர் மறைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடலில் ஊசி உடைந்து தங்கியதை மறைத்த மருத்துவர்
x
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சென்னை மாதவரத்தைச் சேர்ந்த இளைஞர் ஜான், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஊசி போட்ட இடத்தில் வலி அதிகமாக இருந்ததை அடுத்து மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்ற போது மருத்துவர் ஐஸ் கட்டி வைத்தால் சரியாகிவிடும் என்று கூறி அவரை திருப்பி அனுப்பியுள்ளார். பின்னர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, ஜானின்  உடலில் ஊசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சையின் மூலம் ஊசி அகற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட ஜான், தனியார் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்