சுபஸ்ரீ மரணத்தை தொடர்ந்து கட்சி கொடி சாய்ந்து ராஜேஷ்வரி கால்கள் முறிவு

சுபஸ்ரீ மரணத்தின் அதிர்வலைகள் இன்னும் நீங்காத நிலையில், கோவையில் அதே போன்ற மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
x
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவினாசி சாலையில் நடப்பட்டிருந்த கட்சி கொடி கம்பம் திடீரென கீழே விழுந்துள்ளது. இதனை கண்ட ராஜேஷ்வரி கொடி கம்பத்தின் மீது மோதாமல் இருக்க தனது இருசக்கர வாகனத்தை உடனடியாக திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி, ராஜேஸ்வரியின் வாகனத்தில் மோதியது. அப்போது ராஜேஸ்வரியின் காலில் லாரி ஏறியதால், கால்கள் இரண்டிலும் பலத்த காயங்களுடன் அவர் தனியார் மருத்துவமனைக்கு 
அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதே போல அந்த லாரி மோதியதில் மேலும் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஆனால் அந்த வாகனம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. விசாரணையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள அதிமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவிற்காக இந்த கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்த‌து தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்