புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி ஏற்பு : பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி ஏற்பு : பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர்
x
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா நடந்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிய நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி மற்றும் நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 1985-ல் சட்டப் படிப்பை முடித்த அமரேஷ்வர் பிரதாப் சாஹி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். சிவில் மற்றும் அரசியல் சாசன வழக்குகளில் ஆஜராகி வந்த அவர், 2005ஆம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018 நவம்பரில் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்