கர்நாடகாவிலிருந்து இடம்பெயர்ந்த 130 காட்டு யானைகள் : கிராம மக்கள், விவசாயிகள் அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெரும் கூட்டமாக இடம் பெயர்ந்துள்ள காட்டு யானைகளால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.
கர்நாடகாவிலிருந்து இடம்பெயர்ந்த 130 காட்டு யானைகள் : கிராம மக்கள், விவசாயிகள் அச்சம்
x
கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 130க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி  தமிழக எல்லைப்பகுதியான ஒசூர் அருகே உள்ள தளி மற்றும் ஜவளகிரி வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன. பெரும் கூட்டமாக  நடமாடிவரும் அந்த காட்டு யானைகள் தளி வனப்பகுதியில் 60 காட்டு யானைகளும்,  ஜவளகிரி வனப்பகுதியில் 70 காட்டுயானைகளும் இரண்டு குழுக்களாக பிரிந்து முகாமிட்டுள்ளன. 

ஒசூர், தேன்கனிகோட்டை, தளி, ஜவளகிரி, உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 
ராகி, நெல்  விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதேபோல்   தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த  நிலையில் காட்டு யானைகள் அவற்றை தின்று சேதப்படுத்தும் என்பதால்  அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டுயானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர் அவற்றை மீண்டும் கர்நாடகா பகுதிக்கு விரட்டும் 
பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டுயானைகள் முகாமிட்டுள்ள 
வனப்பகுதியை ஒட்டிய  கிராம மக்கள் கால்நடைகள் மேய்ச்சலில் 
ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்