இருசக்கரவாகனம் மீது கார் மோதி விபத்து : வேகமாக கார் ஓட்டி வந்த கல்லூரி மாணவர் கைது

சென்னை அடுத்த குரோம்பேட்டையில், கல்லூரி மாணவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் மோதி, தலைமைக்காவலர் உயிரிழந்தார்.
இருசக்கரவாகனம் மீது கார் மோதி விபத்து : வேகமாக கார் ஓட்டி வந்த கல்லூரி மாணவர் கைது
x
சென்னை அடுத்த குரோம்பேட்டையில், கல்லூரி மாணவர் அதிவேகமாக ஓட்டி வந்த கார் மோதி, தலைமைக்காவலர் உயிரிழந்தார். குரோம்பேட்டையை சேர்ந்த ரமேஷ், சேலையூர் காவல்நிலைய தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று நள்ளிரவு  பணி முடித்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். தாம்பரம் கடப்பேரி ஜிஎஸ்டி சாலையில் சென்றபோது,  பின்னால் வந்த கார், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிகவேகமாக கார் ஓட்டிவந்த 20-வயதான கல்லூரி மாணவரை, போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்