நகைக்காக கழுத்தை நெறித்து மூதாட்டி கொலை : கொள்ளையர்கள் குறித்து காவல்துறை விசாரணை

சிவகங்கை அருகே மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, அவரது கணவரை தாக்கிய கொள்ளைக்கும்பல், நகைகளை திருடிச்சென்றுள்ளது.
நகைக்காக கழுத்தை நெறித்து மூதாட்டி கொலை : கொள்ளையர்கள் குறித்து காவல்துறை விசாரணை
x
ஒக்கூர் பிள்ளையார்கோவில் தெருவில் 82 வயதான ஆதப்பன், மற்றும் அவரது மனைவி மீனாட்சியும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை இவர்கள் வீட்டிற்குள் சென்ற கொள்ளையர்கள், மீனாட்சியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, கழுத்தில் இருந்த 10 சவரன் நகையை பறித்துள்ளனர். தடுக்க முயன்ற ஆதப்பனையும் கடுமையாக தாக்கிய அந்த கும்பல், வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளிப்பொருள்களை அள்ளிச்சென்றுள்ளது. இன்று காலை பால்காரர் வந்து பார்த்தபோது, மூதாட்டி உயிரிழந்த நிலையிலும், ஆதப்பன் உயிருக்கு போராடிக்கொண்டும் இருந்தார். உடனே அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்த புகாரைத்தொடர்ந்து,கொள்ளையர்கள் குறித்து மதகுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்