"போக்குவரத்து கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு"

அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனர்கள் மது அருந்தி விட்டு பணிக்கு வருவதைத் தடுக்கும் விதிகளை, கண்டிப்புடன் பின்பற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
* போதையில் பணியில் இருந்த ஊழியரை பணி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. 

* அப்போது, பணிக்கு வரும்போது மது அருந்தி இருக்கிறார்களா..? என்பதை கருவி மூலம் சோதனை செய்வதாக, மாநகர போக்குவரத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

* சோதனைக்கு  பிறகே பேருந்துகளை இயக்க ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அனுமதிப்பதாகவும்

* போதையில் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அதில்  கூறப்பட்டுள்ளது.

* இதையடுத்து, இந்த விதிகளை கண்டிப்புடன் பின்பற்றுமாறு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி,  விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்