"சென்னை உயர் நீதிமன்றம் மீது யாருக்கும் உரிமையில்லை"

யாரும் உரிமை கோர முடியாது என்பதை தெளிவுபடுத்தும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற 7 வாயில்களும், இரவு 8 மணி முதல் மூடப்பட உள்ளன.
சென்னை உயர் நீதிமன்றம் மீது யாருக்கும் உரிமையில்லை
x
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்கு யாரும் உரிமை கோர முடியாது என்பதை அறிவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் வாயில்கள் மூடப்படுவது வழக்கம். இந்த வகையில், இன்று இரவு 8 மணிக்கு உயர் நீதிமன்றத்தின் 7 வாயில்களும் மூடப்படுகின்றன. ஞாயிற்று கிழமை இரவு 8 மணிவரை வாயில்கள் மூடப்பட்டிருக்கும். இதன்போது, நீதிபதிகள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்ட மாட்டார்கள். 150 ஆண்டுகள் பழமையும், பெருமையும் வாய்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த நடவடிக்கை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்