பேரிடர் மீட்பு விழிப்புணர்வு முகாம் : அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், சென்னையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
x
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், சென்னையில்  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  அமைச்சர் ஜெயக்குமார்,  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்த இந்த முகாமில்,  பேரிடர் காலங்களில் செயல்படும் முறைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி, வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விஸ்வநாதன், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு பொறுப்பு ஆணையர் சைலேந்திரபாபு  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்