சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் - லட்சுமி நரசிம்மன்

எளிதில் சரிசெய்யக்கூடிய சில கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
x
காலம் சார்ந்த ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை கேற்ப  மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 8-ஆவது நாளாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், சில  கோரிக்கைகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரே தீர்வு காண முடியும் என்றார் . மருத்துவ கல்வி இயக்குனர் தீர்வு காண்கிறோம் என்று சொன்னாலே போராட்டத்தை கைவிடுவது குறித்து பரிசீலிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்