மருத்துவர்கள் அலட்சியத்தால் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண் உயிரிழப்பு

வயிற்று வலியால் அவதிபட்ட சென்னை அமைந்தகரையை சேர்ந்த ஷிபானா என்பவரை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
x
வயிற்று வலியால் அவதிபட்ட சென்னை அமைந்தகரையை சேர்ந்த  ஷிபானா என்பவரை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி  அவர் உயிரிழந்தார். இதனையடுத்து ஷிபானாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க கால தாமதம் செய்ததன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக குற்றம் சாட்டிய உறவினர்கள் நள்ளிரவில் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் சிகிச்சை அளிக்க இயலாது என மருத்துவர்கள் கூறியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்