வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை : ஏரியில் தண்ணீர் இல்லாததால் திரும்பிச்செல்லும் அவலம்

வேடந்தாங்கல் ஏரிக்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்தபோதிலும், அங்கு தண்ணீர் இல்லாததால், ஏமாற்றத்துடன் தாய்நாடு திரும்பி வருகின்றன.
x
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் பருவமழை சரியாக பெய்தால், பறவைகள் வருகை சீசன் தொடங்கி, சரணாலயம் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால், ஏரியில்  தண்ணீர் இல்லை. இருந்தபோதிலும்,  வழக்கம் போல், இந்தோனேசியா பங்களாதேஷ், பர்மா, பாகிஸ்தான் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து,  26 வகையான பறவைகள் வேடந்தாங்கல் ஏரிக்கு வந்துள்ளன. இந்த நிலையில், ஏரியில் தண்ணீர் இல்லாததால், அந்த பறவைகள் தாய்நாட்டிற்கு ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்