அண்ணாநகர் டவர் கிளப் - சட்டவிரோத கட்டுமான வழக்கு: சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணாநகர் டவர் கிளப், அனுமதியின்றி கட்டிய கட்டுமானங்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணாநகர் டவர் கிளப் - சட்டவிரோத கட்டுமான வழக்கு: சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு
x
கடந்த 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட  அண்ணாநகர் டவர் கிளப், தங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்று, கலையரங்கக் கட்டிடத்துடன் சேர்த்து  5 ஆயிரத்து 827 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது.  அந்த நிலத்திற்கு அருகில், பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டு காலியாக இருந்த 31 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் கிளப் பயன்படுத்தி வந்தது. அந்த நிலத்தில் அனுமதியின்றி  கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், ஒப்பந்ததம் முடிவடைந்ததை தொடர்ந்து இடத்தை காலி செய்யும்படி கடந்த 2012 ஆம் மாநாகராட்சி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து கிளப் நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சில வசதியான நபர்களுக்காக சட்டவிரோத கட்டுமானங்கள் கட்டியுள்ளதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி,  கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்