"காய்ச்சல் வந்தால் மக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம்" - விஜயபாஸ்கர்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
x
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றார். டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அரசு துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்