யானைக்கூட்டம் சேர்க்காததால் சாலையில் சுற்றித்திரிந்த குட்டி யானை
பதிவு : அக்டோபர் 09, 2019, 03:46 PM
சத்தியமங்கலம் அருகே தாயை பிரிந்த யானை குட்டியை, மீண்டும் யானைக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியில், சில நாட்களுக்கு முன்பு காட்டிலிருந்து வெளியேறிய பெண் யானை குட்டியை, வனத்துறையினர் மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். ஆனால், யானைக்கூட்டம் சேர்த்து கொள்ளாததால் அந்த யானைகுட்டி மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனச்சாலையில் சோகத்துடன் சுற்றித்திரிந்தது. இதனையடுத்து, யானைகுட்டியை மீட்டு காராச்சிக்கொரை வன கால்நடை மையத்திற்கு கொண்டுசென்ற வனத்துறையினர், அதற்கு நாள்தோறும் 15 லிட்டர் லேக்டோஜென் பால் கொடுத்து பராமரித்து வந்தனர்.  
இதனிடையே, இன்று வனத்துறையினர், குட்டியானையை வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுசென்று யானைக்கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  யானைக்கூட்டம் மீண்டும் சேர்க்காவிட்டால், குட்டியானை வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு செல்லப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

வெட்டப்பட்ட மரத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய மக்கள்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மரத்தை இரவோடு இரவாக மர்மநபர்கள் வெட்டிய நிலையில், அதற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

0 views

உத்தரப்பிரதேசத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறி விபத்து : 12 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் மாவ் அருகே உள்ள முகமதாபாத்தில், சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

0 views

மும்பை நீதிமன்றம் முன் வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள எஸ்பிளனேடு நீதிமன்றம் முன்பு, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோ ஆப்ரேடிவ் வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

3 views

"9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7 views

விஜயதசமி நாளில் 2,754 மாணவர்கள் சேர்க்கை

விஜயதசமி நாளில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 754 குழந்தைகள் சேர்ந்ததாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

19 views

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.