தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கே.ஆர். பி மற்றும் கெலவரப்பள்ளி அணைகளிலில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர். பி மற்றும் கெலவரப்பள்ளி அணைகளிலில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால்,  44 அடி உயரம் கொண்ட கெலவரப்பள்ளி அணை தற்போது 42 அடியை எட்டியுள்ளது. கே.ஆர்.பி. அணைக்கும் நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்