சென்னையில் விரும்பி குடியேறிய சீன குடும்பம்... முழு இந்தியனாக உணரும் சென்

சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டால் உலக பொருளாதாரத்தில் சூப்பர் பவராக உருவாக முடியும் என்று சென்னை வாழ் சீன மருத்துவர் சென் தெரிவிக்கிறார்.
x
வருகின்ற 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் மோடியின் சந்திப்பு  உலகளவில் பல்வேறு எதிர்ப்பார்ப்புகளை எழுப்பியுள்ளது. இது குறித்து பாரிமுனையில் வசித்து வரும் சென்னை வாழ் சீனரான பல் மருத்துவர் சென்னிடம் பேச சென்ற போது, நாம் ஹலோ சொன்னால் வாருங்கள் வணக்கம் என நம்மை தமிழிலில் வரவேற்று அசத்துகிறார். மூன்று தலைமுறையாக பல் மருத்துவம் செய்து வரும் சென்னை வாழ் சீன குடும்பத்தை சேர்ந்த இவருக்கு தமிழகத்திற்குமான நெருக்கம் சற்று ஆழமானது. கடந்த 1930 ஆம் ஆண்டு சென்னைக்கு சுற்றுலா பயணியாக வந்த இவரது தந்தைக்கு சென்னை மிகவும் பிடித்து போனதால், இங்கே குடியேறிவிட்டாராம். 

சீனாவின் ஹூபே மாகாணத்தை பூர்விமாக கொண்டது இவரது குடும்பம், ஆனால் தங்களை போல் நான் ஒரு இந்தியனாகவே உணர்கின்றேன் என்று கூறும் இவருக்கு 
தமிழ் பேசவும் எழுதவும் தெரியும். ஆனால் சீன மொழியில் பேச மட்டுமே தெரியுமாம். சென்னையிலேயே பிறந்து, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடிந்த சென்னின்  மகன் கிறிஸ்டோபர் சென் மற்றும் மகள் ஜெனிபர் சென் மூன்றாவது தலைமுறையாக பல் மருத்துவ தொழிலே செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா சென்று உறவினர்களை சந்தித்துவிட்டு திரும்பியதாக கூறும் அவர், சீனாவும் இந்தியாவும் ஒற்றுமையாக இருப்பது சந்தோஷம் அளிப்பதாக கூறுகிறார். 

பிடித்த நடிகர்கள் ரஜினி, சிவாஜிகணேசன் என்றும் அவ்வபோது வீட்டில் சீன உணவுகளை சமைத்தாலும் தென் இந்திய உணவுகளே தமக்கு விருப்பமானவை என்று கூறுகிறார். இந்தியாவில் விருப்பப்பட்டு குடியேறிய தாம் இந்திய காலாச்சாரங்கள், திருவிழாக்களில் விரும்பி பங்கேடுப்பதாக கூறும் இவர், எல்லோரையும் போல் தாமும் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பே பெரிதும் எதிர்பார்ப்பதாக கூறுகிறார். 

Next Story

மேலும் செய்திகள்