திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : கைதான இருவருக்கு 18 ந்தேதி வரை நீதிமன்ற காவல்
நகை கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், கனக வள்ளி ஆகிய இருவருக்கும், நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜீவல்லரி நகை கடையில் கடந்த 2 ஆம் தேதி அதிகாலையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ் என்பவரின் தாய் கனகவள்ளி மற்றும் அவரது உறவினர்களையும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாயார் கனகவள்ளி ஆகியோர் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பிறகு, இருவருக்கும் 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து மணிகண்டன் திருச்சி மத்திய சிறையிலும், கனகவள்ளி பெண்கள் தனி சிறையிலும் அடைக்கப்பட்டார்.
Next Story