நிலை தடுமாறி ஓடிய பேருந்து - கட்டுப்படுத்திய கார் ஓட்டுநர்

சென்னை வேளச்சேரி நூறு அடி சாலையில் அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலை தடுமாறி ஓடிய பேருந்து - கட்டுப்படுத்திய கார் ஓட்டுநர்
x
சிறுச்சேரியில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் ஓட்டுனர் ராஜேஷ் கண்ணா நெஞ்சுவலியால் ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்துள்ளார். சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த கார்கள் மீது  பேருந்து மோதிக் கொண்டே சென்றுள்ளது. இதனை பார்த்த கார் ஓட்டுனர் விஜய்,  பேருந்தில் ஏறி பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். இதனால் பேருந்தில் பயணித்த 15 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஓட்டுநர் ராஜேஷ்கண்ணாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த ஓட்டுநர் ராஜே​ஷ் கண்ணாவுக்கு 36 வயதே ஆகிறது.

Next Story

மேலும் செய்திகள்