தமிழக அரசுக்கு மத்திய அரசின் வயோஷ்ரேஷ்தா விருது : தமிழக அரசு சார்பில் அமைச்சர் சரோஜா விருதை பெற்றார்

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோருக்கான சிறப்பான சேவை மற்றும் வசதிகள் வழங்கியதற்காக மத்திய அரசின் வயோஷ்ரேஷ்தா-2019 விருது தமிழக அரசிற்கு வழங்கப்பட்டது.
தமிழக அரசுக்கு மத்திய அரசின் வயோஷ்ரேஷ்தா விருது : தமிழக அரசு சார்பில் அமைச்சர் சரோஜா விருதை பெற்றார்
x
முதியோர் நலனுக்காக கடந்த 2007-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்த விருதை வழங்கினார். தமிழக அரசு சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா இந்த விருதை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த ஒருங்கிணைந்த முதியோர் வளாக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், இந்த திட்டத்தின் கீழ், தற்போது, 48 முதியோர் வளாகங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்