இடைத்தேர்தல் : இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.
இடைத்தேர்தல் : இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வருகிற 21ம் தேதியன்று தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை முடிந்த நிலையில், விக்கிரவாண்டியில் 15 மனுக்களும், நாங்குநேரியில் 24 மனுக்களும் ஏற்கப்பட்டன. இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள் என்பதால், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் வெளியாகும். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்