லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை விவகாரம் : புதுக்கோட்டையில் 5 பேர் கைது

லலிதா ஜுவல்லரி நகை கொள்ளை விவகாரம் தொடர்பாக வடமாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, ஒருவர் மாடியில் இருந்து குதித்து தப்ப முயற்சித்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
x
திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகை கொள்ளையடிக்கப்பட்டது 
தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வரும் கின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விடுதியில் தங்கி இருந்த 5 வட மாநில இளைஞர்களிடம் சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.  அப்போது அவர்களுக்கு உணவு வாங்கி வருவதற்காக வெளியே  சென்று வந்த ஷமீர் என்பவர் போலீசாரை பார்த்தவுடன் தப்பிச்செல்ல விடுதி மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அதில் கால் முறிந்ததால் அசைய முடியாமல் கிடந்த ஷமீரை, மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  விசாரணைக்கு பிறகு நள்ளிரவிலேயே ஷமீரை தவிர மற்ற 5 பேரையும் திருச்சிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். பிடிபட்டவர்கள் ஜார்கண்ட், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களில்  தொடர்புடையவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்