"கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா : அரசாணையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது" - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் வகையிலான அரசாணையின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.
கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா : அரசாணையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி
x
அரசு புறம்போக்கு மற்றும் கோயில்  நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வந்தால் பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.இதனை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த அரசாணை ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும், கோயில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உள்ளது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதுவரை இந்த அரசாணையின் படி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உறுதி அளித்தார்.இதனையடுத்து வழக்கை வரும் 30ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்