மருத்துவ சேர்க்கையில் ஆள்மாறாட்டம் முறைகேடு விவகாரம் : உதித் சூர்யாவும், அவரது தந்தையும் தலைமறைவு

நீட் தேர்வில் முறைகேடு செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் சீப் மெடிகல் ஆபீசராக பணிபுரிந்து வருகிறார்.
மருத்துவ சேர்க்கையில் ஆள்மாறாட்டம் முறைகேடு விவகாரம் : உதித் சூர்யாவும், அவரது தந்தையும் தலைமறைவு
x
நீட் தேர்வில் முறைகேடு செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் சீப் மெடிகல் ஆபீசராக பணிபுரிந்து வருகிறார். வெங்கடேசன் தற்போது விடுமுறையில் உள்ள நிலையில், சென்னை வந்துள்ள தேனி போலீசார், ஸ்டான்லி மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். வெங்கடேசனுடன் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், வெங்கடேசனும்  அவருடைய மகன் உதித் சூர்யாவும் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்